ADDED : ஜூலை 01, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டுகுப்பம் கிராம குளக்கரை அருகே பிளாக்கில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த பொதிராங்குளம் கிராமத்தை சேர்ந்த இந்திரா, 40, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 25 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.