/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய் நீர்தேக்கத்தில் மூழ்கிய வாலிபர் மாயம்
/
தேர்வாய் நீர்தேக்கத்தில் மூழ்கிய வாலிபர் மாயம்
ADDED : மார் 25, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அஜித், 23. நேற்று, நண்பர்களுடன் தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தில் குளிக்க சென்றார்.
மதிய நேரத்தில், நண்பர்கள் அனைவரும் நீர்தேக்க பகுதியில் நீர் நிரம்பி வழியும் இடத்தில், தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நீர்தேக்கத்தில் அஜித் மூழ்கி மாயமானார்.
அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற தேர்வாய் கண்டிகை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மாயமான அஜித்தை தேடி வருகின்றனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

