/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எடக்குப்பம் அம்மன் கோவிலில் திருட்டு
/
எடக்குப்பம் அம்மன் கோவிலில் திருட்டு
ADDED : மே 10, 2024 08:08 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில், நுாக்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவில் பூட்டப்பட்டிருந்தது.
நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கதவு பூட்டு, தாழ்பாள் ஆகியவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். பீரோ, உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது.
அம்மன் கழுத்தில் இருந்த தங்க பொட்டு, பீரோவில் இருந்த தங்க பொட்டு என நான்கு கிராம் தங்கம், 5,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகை, பீரோவில் இருந்த, 2,500 ரூபாய் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரிந்தது.
திருட்டு குறித்து, பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கோவிலில், கடந்த, 2022ல் இரண்டு முறை, கடந்த ஆண்டு, ஒரு முறை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.
நேற்று நான்காவது முறையாக திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுவரை, 2 சவரன் தங்கம், பித்தளை மணி, சமையல் பாத்திரங்கள், 30,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு திருட்டின்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவிக்களையும் திருடி சென்றனர்.
கோவிலில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றும், இதுவரை அதில் ஈடுபட்டவர்களை பிடிபடவில்லை. போலீசார் அதில் கவனம் செலுத்தவில்லை என, கிராமவாசிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.