/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகை கடையில் பூட்டு உடைத்து 9 சவரன் திருட்டு
/
திருத்தணி நகை கடையில் பூட்டு உடைத்து 9 சவரன் திருட்டு
திருத்தணி நகை கடையில் பூட்டு உடைத்து 9 சவரன் திருட்டு
திருத்தணி நகை கடையில் பூட்டு உடைத்து 9 சவரன் திருட்டு
ADDED : ஆக 31, 2024 11:17 PM

திருத்தணி: திருத்தணி பலிஜா தெருவில் வசிப்பவர் சண்முகம், 55. இவர், திருத்தணி என்.எஸ்.சி., போஸ் சாலை, 2-வது ரயில்வே கேட் அருகே ஜூவல்லரி மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சண்முகம் வியாபாரம் முடித்துக் கொண்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை, 8:00 மணிக்கு சண்முகம் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்றபோது, 9 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
மேலும் கடையில் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா, இன்வெட்டரை மற்றும் ஷட்டர் கதவையும் சேதப்படுத்தியிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து சண்முகம் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி வாயிலாக மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.