/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'மெடிக்கல் ஷாப்'பில் ரூ.8 லட்சம் திருட்டு
/
'மெடிக்கல் ஷாப்'பில் ரூ.8 லட்சம் திருட்டு
ADDED : மே 04, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43.
இவர், அதே பகுதியில், 'செந்தில் மெடிக்கல்' என்ற பெயரில், மருந்தகம் நடத்தி வருகிறார். அதில், அனைத்து வகையான மருந்துகளையும், சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் செய்கிறார். நேற்று காலை 9:00 மணி அளவில் வழக்கம் போல் கடை திறக்க சென்றார். அப்போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.