/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் திருத்தணி விவசாயிகள் சராமரி புகார்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் திருத்தணி விவசாயிகள் சராமரி புகார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் திருத்தணி விவசாயிகள் சராமரி புகார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் திருத்தணி விவசாயிகள் சராமரி புகார்
ADDED : ஜூன் 13, 2024 05:36 PM
திருத்தணி:
திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், காஞ்சிபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில், மின்வாரிய உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் லட்சுமாபுரம் ஊராட்சி துணை தலைவர் குமரவேலன் பங்கேற்று தெரிவித்தாவது:
எங்கள் ஊராட்சியில் குறைந்த அழுத்த மின்சப்ளை வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்கள் இரவு நேரம் முழுவதும் முன் அறிவிப்பு இன்றி மின்சப்ளை நிறுத்தம் செய்யப் படுகிறது.
இதனால் குடிநீர் மின்மோட்டார்கள் இயங்கி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை.
இதுதவிர, எங்கள் பகுதியில் மின்சப்ளை துண்டிப்பு மற்றும் மின்சாரம் குறித்து பிற தகவல் தெரிவிப்பதற்கு மின்வாரிய இளநிலை பொறியாளர் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் போது ஒரு முறை கூட மொபைல் போன் எடுத்து பேசுவதில்லை. எங்கள் ஊராட்சி பக்கமும் வருவதில்லை என தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஓய்.வேணுகோபால் பேசும் போது, அத்திமாஞ்சேரிபேட்டை துணை மின்நிலையத்தில் இருந்து காபூல்கண்டிகை பகுதியில் மின்சப்ளை சீராக வழங்குவதற்கு புதிய பீடர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மூன்று வருடம் ஆகியும், ஐந்து மின்கம்பங்கள் அமைக்காமல் இருப்பதால் புதிய பீடர் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலம் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், 100 கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் விவசாயிகள் மின்மோட்டார்களை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என தெரிவித்தார்.
இதுதவிர 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் மும்முனை மின்சாரம் சரியாக வழங்காமல் உள்ளதால் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல் தவித்து வருகிறோம் என சராமரி புகார் தெரிவித்தனர்.