ADDED : ஜூலை 02, 2024 06:53 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார். ஆணையர் அருள் வரவேற்றார்.
கூட்டத்தில், 27ம் தேதி முதல், 31 ம் தேதி வரை திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாற்கு வருகை தரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பது, கால்வாய்கள் துார்வாரி சீரமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் என 40 பேருக்கு, நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் அருள் ஆகியோர் இலவச சீருடைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் விஜயகாமராஜ், பணி மேற்பார்வையாளர் நாகராஜ் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.