/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்மண்டி வீணாகும் திருவாலங்காடு கோவில் நிலம்
/
புதர்மண்டி வீணாகும் திருவாலங்காடு கோவில் நிலம்
ADDED : ஜூன் 30, 2024 11:11 PM

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமாக மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கைவிடப்பட்டது. தற்போது குடில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் நிலத்தை அலட்சியமாக விட்டு வைத்துள்ளதால் பன்றிகளின் கூடாரமாக மாறிவுள்ளது.
தற்போது புதர் மண்டியும், பகுதிவாசிகள் குப்பை கொட்டுமிடமாகவும் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு செந்தமான இடத்தை துாய்மையாக வைத்து பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.