/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
/
திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 03, 2024 11:14 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. திருவள்ளூர், திருத்தணி மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள், காஞ்சிபுரம் கோட்டத்திலும், திருமழிசை அலுவலகம் செங்கல்பட்டு கோட்டத்திலும் செயல்பட்டு வந்தது.
மாவட்டத்தில் புதிதாக மின்கம்பங்கள், மின் ஒயர்கள், புதிய மின்மாற்றி மற்றும் பழைய மின்மாற்றிக்கு தேவையான பொருட்களை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு கோட்ட அலுவலகத்தில் இருந்து பெற வேண்டி இருந்தது. இதனால், புதிய மின்கம்பம் மற்றும் மின்மாற்றி பராமரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு என, தனியாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, புதிய மின்வாரிய செயற்பொறியாளராக, சென்னை மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், இனிமேல், திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை அலுவலகங்கள், திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் என, புதிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
புதிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு பணியில், மாவட்ட மின்வாரிய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.