/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போணியாகாத திருவள்ளூர் உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'
/
போணியாகாத திருவள்ளூர் உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'
போணியாகாத திருவள்ளூர் உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'
போணியாகாத திருவள்ளூர் உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'
ADDED : மே 04, 2024 11:49 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் மறு சீரமைக்கப்பட்ட உழவர் சந்தையில் விற்பனையாகாததால், விவசாயிகள் வராமல், கடைகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.
திருவள்ளூர் ஜே.என்., சாலையில் கடந்த, 2000ல், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, உழவர் சந்தையை திறந்து வைத்தார். இங்கு, 40 கடைகள் அமைத்து, விவசாயிகள் உற்பத்தி செய்த, காய், கனி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், இந்த உழவர் சந்தை செயல்படாமல் முடங்கியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு, திருவள்ளூர் உழவர் சந்தை, 44.31 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டு, கழிப்பறை, குடிநீர் வசதியுடன், 22 கடைகள் புனரமைத்தும், ஆறு புதிய கடைகள் கட்டப்பட்டன.
மறுசீரமைக்கப்பட்ட உழவர் சந்தை, கடந்த ஆண்டு, அக்., 5ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது பேசிய கைத்தறி துறை அமைச்சர் காந்தி, 'இங்கு உழவர் உற்பத்தியாளர் குழு, விவசாயிகள் உற்பத்தி செய்த காய், கனி, பல்பொருள் கூட்டுறவு சிறப்பு அங்காடி, பூக்கடை செயல்படும். மாலையில், சிற்றுண்டி, சூப் உள்ளிட்ட, மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும்' என தெரிவித்தார்.
தற்போது இந்த உழவர் சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் விற்பனையில்லாததால், விவசாயிகள் யாரும் கடை அமைக்க வரவில்லை.
இதன் காரணமாக, உழவர் சந்தை தற்போது வெறிச்சோடி காட்சியளிக்கிறது.