/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டால் அபராதம் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
/
டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டால் அபராதம் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டால் அபராதம் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டால் அபராதம் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2024 06:44 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள, வீடு, கடைகளில், டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என, கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 16 ஆயிரத்து 985 வீடு; ஆயிரத்து, 802 கடை, ேஹாட்டல்கள் போன்ற வணிக கட்டடங்கள் உள்ளன.
தற்போது, அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, நகராட்சிக்கு உட்பட்ட, காலியிடம், வீடுகளைச் சுற்றிலும், தண்ணீர் தேங்கி உள்ளன.
இவற்றில், கொசு புழுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று, 'காலி டப்பா, உரல், பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பூந்தொட்டி உள்ளிட்டவற்றில், மழைநீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் டப்பாவை அவ்வப்போது ஒரு 'சொட்டு' சோப் ஆயில், தேங்காய் எண்ணெய் விட வேண்டும்,' என அறிவுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள், வீடு, வீடாகச் சென்று, 'வீட்டைச் சுற்றிலும், தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும்.
'தேங்காய் ஓடு, தேவையற்ற பாத்திரங்கள் உள்ளிட்டவைகளில், கொசு புழு கண்டறியப்பட்டால், வீடுகளுக்கு, 500-5 ஆயிரம் ரூபாய், திருமண மண்டபம், கடை போன்ற வணிக நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.