/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : மே 04, 2024 11:44 PM

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலையில், 7:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.
மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு மகா பாரத நாடகமும், 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 3ம் தேதி இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.
நாளை, 6ம் தேதி அர்சுனன் தபசும், 12ம் தேதி காலை துரியோதனன் படுகளம், பகல் 11:40 மணிக்கு அக்னிவளர்த்தல், மாலை, 6:30 மணிக்கு தீ மிதி விழா 13ம் தேதி காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.