/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணி மந்தம் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
/
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணி மந்தம் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணி மந்தம் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
மீஞ்சூர் - வல்லுார் சாலை பணி மந்தம் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
ADDED : ஜூலை 15, 2024 11:13 PM

மீஞ்சூர்: மீஞ்சூர் - வல்லுார் இடையேயான, மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும், 20,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.
காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகம், அதானி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு முனையங்கள், நிலக்கரி கிடங்கு, சாம்பல் கிடங்கு ஆகியவற்றிற்கு இவை சென்று வருகின்றன.
நாள் முழுதும் தொடர் போக்குவரத்து உள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, சாலையை சீரமைக்க, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டன. கடந்த, ஐந்து மாதங்களாக சாலை சீரமைப்பு பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதை கண்டித்து மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால், அங்கு, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
திட்டமிட்டபடி நேற்று காலை, மறியலுக்கு தாயரான பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி சாலை மறியலுக்கு சென்றவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.பொதுமக்களின் போராட்டத்தால் மீஞ்சூர் - வல்லுார் சாலையில், அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.