/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வக்கீலுக்கு மிரட்டல் ரவுடி கைது
/
வக்கீலுக்கு மிரட்டல் ரவுடி கைது
ADDED : செப் 12, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பைச் சேர்ந்தவர் பேட்ரிக், 45; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று முன்தினம் மாலை பேட்ரிக் வெளியே சென்றிருந்த நேரம், அவரது வீட்டுக்கு சென்ற இருவர், பேட்ரிக்கின் தாயிடம், 'உன் மகனை இன்று இரவுக்குள் கொலை செய்து விடுகிறோம் பார்' என, மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பைச் சேர்ந்த 'பண்ணு' ரமேஷ், 43, என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.