/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மது குடிக்க பணம் கேட்டு வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல்
/
மது குடிக்க பணம் கேட்டு வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 26, 2024 02:54 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம் கிராம நிர்வாக அலுவலராக சீனு, 39, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று பணியை முடித்துவிட்டு, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது, அங்கு மது போதையில் வந்த, அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், 45, என்பவர், 'கிராம நிர்வாக அலுவலரை வழிமறித்து, மது குடிப்பதற்கு 50 ரூபாய் வைத்திருப்பதாகவும், மேலும் 100 ரூபாய் கொடுத்தால் மட்டுமே இங்கு இருந்து செல்வேன். இல்லையெனில் கொலை செய்து விடுவேன்' என மிரட்டினார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சீனு கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் கர்ணனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.