தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரி ஓட்டுனரை தாக்கிய மூவர் கைது

லாரி ஓட்டுனரை தாக்கிய மூவர் கைது

லாரி ஓட்டுனரை தாக்கிய மூவர் கைது


ADDED : ஜூன் 28, 2024 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளவேடு:பூந்தமல்லி அடுத்த குன்றத்துார் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், 22. லாரி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் மாலை தன் ஸ்பிளெண்டர் இரு சக்கர வாகனத்தில் வெள்ளவேடு பங்கில் பெட்ரோல் போட சென்றார்.

அப்போது அங்கு பஜாஜ் சி.டி. 100 இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த மூவர் நவீன்குமாரிடம் வண்டியை ஓரமாக விடமாட்டாயா என கூறி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக பேசி தாக்கி சென்றனர். இதுகுறித்து நவீன்குமார் கொடுத்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நவீன்குமாரை தாக்கியது மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்த சுகுமார், 60, கைலாஷ், 20, வெட்டுமணி, 30 என தெரிய வந்தது. போலீசார் நேற்று மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us