/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பொருட்கள் விற்ற மூவர் கைது: கடைக்கு 'சீல்' வைப்பு
/
குட்கா பொருட்கள் விற்ற மூவர் கைது: கடைக்கு 'சீல்' வைப்பு
குட்கா பொருட்கள் விற்ற மூவர் கைது: கடைக்கு 'சீல்' வைப்பு
குட்கா பொருட்கள் விற்ற மூவர் கைது: கடைக்கு 'சீல்' வைப்பு
ADDED : ஜூலை 01, 2024 05:43 AM
பெரியபாளையம் : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் ஒழிக்க வேண்டும் என, எஸ்.பி.,ஸ்ரீநிவாச பெருமாள் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடம்பத்துார் போலீசார் புதுமாவிலங்கை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு பெட்டி கடை ஒன்றில் கூட்டமாக பொருட்கள் வாங்கி கொண்டிருந்த வடமாநிலத்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். கடை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, 64 என்பவர் போலீசாரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
போலீசார் அவரை பிடித்து சோதனை மேற்கொண்ட போது அவரிடமிருந்து 12 விமல், 31 ஹான்ஸ் என உள்ளிட்ட போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் புல்லரம்பாக்கம் போலீசார் சின்ன ஈக்காடு பகுதியில் கசாலி , 76 என்பவரது பெட்டிகடையில் 30 விமல், 15 ஹான்ஸ் என 45 போதைப்பாக்குளை பறிமுதல் செய்தனர். போலீசார் ராமமூர்த்தி, கசாலி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியபாளையம் அடுத்த மஞ்சங்காரணையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் தாமு, 54 என்பவர் கடையில் சோதனை செய்தபோது, விமல், 270, ஹான்ஸ், 73, கூலிப், 7, சுவாகட், 96 என மொத்தம், 446 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, தாமுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடைக்கு, 'சீல்' வைத்தனர்.