/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பசுமை சாம்பியன் விருது மூன்று பேர் தேர்வு
/
பசுமை சாம்பியன் விருது மூன்று பேர் தேர்வு
ADDED : மே 30, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 'தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகள்' தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாநில அளவில் மொத்தம் 100 விருதுகள் வழங்கப்படுகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மூன்று விருதுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது பெற, 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது என, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.