/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பகுதியில் மூன்று பேர் மாயம்
/
திருவள்ளூர் பகுதியில் மூன்று பேர் மாயம்
ADDED : ஆக 28, 2024 12:16 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் தர்மன், 57. இவருக்கு தேவிகா, 51 என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
தர்மன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற தர்மன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேவிகா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
l திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 37. கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் மிகுந்த மன உளைச்சல் அடைந்து கடந்த 25ம் தேதி மாயமானார்.
இவரது மனைவி சமுத்திரகனி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
l திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 25. பாப்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த 22ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இவரது தாயார் அங்கம்மாள் கொடுத்த புகாரின்படி மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.