/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது
/
இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது
இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது
இரு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது
ADDED : ஆக 21, 2024 11:07 PM

பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, அரசு பேருந்து தடம் எண். 34, கள்ளூர் நோக்கி புறப்பட்டது.
பொன்னேரி - பழவேற்காடு சாலை வழியாக சின்னகாவணம் கிராமத்தின் அருகே செல்லும்போது, மர்மநபர்கள் பேருந்து மீது கற்களை வீசி முன் மற்றும் பின்புற கண்ணாடிகளை உடைத்தனர்.
பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் பேருந்தில் இருந்த பயணியர் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு, பயணியருடன் அது கள்ளூர் நோக்கி புறப்பட்டது.
அங்கிருந்து, சிறிது துாரம் சென்ற நிலையில், மீண்டும் மர்ம கும்பல் அந்த பேருந்து மீதும் கற்களை வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.
இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணியர் செய்வதறியாது திகைத்து நின்றனர். தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி பணிமனையில் இருந்து மீண்டும் ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு, காத்திருந்த பயணியரை பாதுகாப்புடன் கள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சின்னகாவணம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், 23, துாயவன், 23 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.