/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேருக்கு 'காப்பு'
/
கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேருக்கு 'காப்பு'
ADDED : மே 09, 2024 01:12 AM
ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி தாலுகா, பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜன், 33. இவர், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் காஸ் சிலிண்டர் ஏற்றி விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, கன்னிகைப்பேர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் அவரை வழிமடக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு, வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதுகுறித்து ராமராஜன் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து, கன்னிகைப்பேர் பெரிய காலனியைச் சேர்ந்த சங்கர், 22, ரஞ்சித், 23, விக்கி, 27, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.