/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது
ADDED : ஜூன் 04, 2024 05:57 AM
திருத்தணி : திருத்தணி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் வெங்கடேசன், சிவகுமார் ஆகிய இருவரும், திருத்தணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலஞ்சேரி கூட்டுச்சாலையில் மூன்று இளைஞர்கள் கத்தியைக் காட்டி, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோரை மிரட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த காவலர்கள் இருவரும், மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், திருத்தணி வேலஞ்சேரி காலனியைச் சேர்ந்த ராஜ்குமார், 23, இந்திரா நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 21, வள்ளியம்மாபுரம் நவீன், 23, என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.