ADDED : ஜூலை 04, 2026 03:51 PM

ஊத்துக்கோட்டை, ஜூலை 5–
தள்ளு மாடல் அரசு பேருந்துகளால் பயணியர், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், காளஹஸ்தி, நெல்லுார், சத்தியவேடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, 35 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்குள்ள பெரும்பாலான பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும்போது, பாதி வழியில் நின்று விடும் நிலையில் உள்ளது. ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேட்டிற்கு ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு புத்துாரில் இருந்து ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்து நின்றது. பின் அங்கிருந்து கிளம்பும்போது, பேருந்து மக்கர் செய்ததால் பயணியர் பேருந்தை தள்ளிவிட்டனர். பின் பேருந்து கிளம்பியது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
