/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாகசாலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பாகசாலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஆக 31, 2024 11:29 PM

திருவாலங்காடு,: திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில் கொசஸ்தலையாற்றின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.
இந்தக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக நாளை ஒட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கலச பூஜை மற்றும் முதல் கால பூஜை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் காலபூஜையும், 10.30 மணிக்கு கலச புறப்பாடு மற்றும் 108 கலச அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
இதில் பாகசாலை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து சென்றனர்.