/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - சோளிங்கர் சாலை விரிவாக்கம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
திருத்தணி - சோளிங்கர் சாலை விரிவாக்கம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
திருத்தணி - சோளிங்கர் சாலை விரிவாக்கம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
திருத்தணி - சோளிங்கர் சாலை விரிவாக்கம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மார் 07, 2025 01:56 AM

திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இச்சாலை இரு வழிச்சாலையாக உள்ளதாலும், அதிகளவில் வாகனங்கள் செல்வதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
இதை தடுக்கும் வகையில், திருத்தணி- சோளிங்கர் நெடுஞ்சாலை, 23 கிலோ மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கு திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் தீர்மானித்துள்ளனர்.
முதற்கட்டமாக தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, 21.50 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த மாதம் துவங்கியது.
தற்போது சாலையோரம் பள்ளங்கள் தோண்டி சாலை விரிவாக்கப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் சாலையோரம் பள்ளம் தோண்டும் இடத்தில் தடுப்புகள் மற்றும் வேலை நடப்பதற்காக அறிகுறிகள் வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்காமல் வேலை செய்து வருகின்றனர்.
இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையோர பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இதுதவிர எதிர் எதிரே வாகனங்கள் மாறும் போது, சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றனர்.
எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் தடுப்புகள் மற்றும் பணிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியுமாறு வசதி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.