/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு வார சந்தை ஏலம் தள்ளி வைப்பு
/
திருவாலங்காடு வார சந்தை ஏலம் தள்ளி வைப்பு
ADDED : ஆக 16, 2024 11:21 PM

திருவாலங்காடு, : திருவாலங்காடில் வார சந்தை ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் வார சந்தைக்கான ஏலம் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார். துணை பி.டி.ஓ., மீனாட்சி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கொரோனா மற்றும் நிர்வாக காரணங்களால் நான்கு ஆண்டுகளாக சந்தை ஏலம் நடைபெறவில்லை. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி நேற்று சந்தை ஏலம்நடந்தது. இதில் பங்கேற்க முன்தொகையாக 5,000 ம், வாகன நிறுத்துமிடத்திற்கு 10,0000 ம் நிர்ணயிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏலம் எடுக்க வந்தவர்கள் கடந்தாண்டுகளில் சந்தையில் வசூலிக்கப்பட்ட தொகை விபரம் மற்றும் அந்த பணம் எதற்காக செலவு செய்யப்பட்டது என்பது குறித்த கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.