/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு
/
புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 31, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், புகையிலை சார்ந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, புகை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை தடுப்பது மற்றும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
அடையாறு புற்றுநோய் நிபுணர் மருத்துவர் சுரேந்திரன் வீரய்யா, சென்னை மருத்துவக் கல்லுாரி மனநல மருத்துவர் விமல் ஜோஷி வீரப்பன், மாவட்ட மனநல மருத்துவர் சகுந்தலா தேவி ஆகியோர் பேசினர்.