ADDED : மார் 09, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: தினமும் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவால் விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.
தற்போது வரத்து அதிகரிப்பால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ தக்காளி 15 - 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெங்காயம் விலை 20 - 30 ரூபாய் வரை விற்பனையாகிறது.
நேற்று திருவள்ளூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் 7 கிலோ தக்காளி 100 ரூபாய் மற்றும் மூன்று கிலோ வெங்காயம் 100 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.