/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாம்பல் லாரிகளால் மீஞ்சூர் பகுதியில் புழுதிக்காடு வருவாய், சுகாதாரம் பாதித்து வியாபாரிகள் தவிப்பு
/
சாம்பல் லாரிகளால் மீஞ்சூர் பகுதியில் புழுதிக்காடு வருவாய், சுகாதாரம் பாதித்து வியாபாரிகள் தவிப்பு
சாம்பல் லாரிகளால் மீஞ்சூர் பகுதியில் புழுதிக்காடு வருவாய், சுகாதாரம் பாதித்து வியாபாரிகள் தவிப்பு
சாம்பல் லாரிகளால் மீஞ்சூர் பகுதியில் புழுதிக்காடு வருவாய், சுகாதாரம் பாதித்து வியாபாரிகள் தவிப்பு
ADDED : மே 25, 2024 11:57 PM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், வல்லுார் பகுதிகளில் உள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அத்திப்பட்டு அடுத்த செப்பாக்கம், குருவிமேடு ஆகிய பகுதிகளில், தண்ணீருடன் கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.
தண்ணீர் வற்றியபின், அவை சாலைப்பணிகள் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீஞ்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன.
லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குவித்து வைத்து சாம்பல் கொண்டு செல்லப்படுகின்றன.
'ஓவர் லோடு' சாம்பல் கழிவுகள் மேடு பள்ளங்களில் செல்லும்போது, சிதறி சாலையோரங்களில் குவிகின்றன. வாகனங்கள் இவற்றின்மீது பயணிக்கும்போது சாலை புழுதிகாடாக மாறுகிறது.
இதனால் வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நாள்முழுதும் புழுதியை சுவாசித்து இருமல், மூச்சுதிணறல், சுவாச கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குடியிருப்புகளின் உள்பகுதிவரை புழுதி படிவதால், வீட்டில் உள்ள உணவுப்பொருட்கள், துணிகள் துாசிபடிந்து வீணாகின்றன.
புழுதி பறக்கும் சாலையில் இரு வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
கடைகளில் உள்ள விற்பனை பொருட்களும் துாசிபடிந்து பாழாகின்றன. இதனால் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
மீஞ்சூர்- வண்டலுார் வெளிவட்ட சாலை சந்திப்பில் துவங்கி, பி.டி.ஓ. அலுவலகம், ரமணா நகர், புங்கம்பேடு, பட்டமந்திரி, வல்லுார் வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை புழுதியா இருக்கிறது.
'ஓவர் லோடு' சாம்பல் லாரிகள், மீஞ்சூர் - வண்டலுார் சாலை சந்திப்பை கடந்துதான் செல்கின்றன. அங்கு, 24மணிநேரமும் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். சாலையில் ஏற்படும் புழுதியில் அவர்களின் உடல்நலமும் பாதிக்கிறது. இருப்பினும் 'ஓவர்லோடு' சாம்பல் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:
சாம்பல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு குறித்து தொடர்ந்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதற்கு முன்பிருந்த அதிகாரிகளிடம் சாம்பல், மற்றும் நிலக்கரி லாரிகள் தொடர்பாக புகார் தெரிவித்தால், வருவாய், காவல் அதிகாரிகள், லாரி நிறுவனங்களை எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுப்பர். தற்போது அதிகாரிகள் ஏனோ அக்கறை காட்டுவதில்லை.
இதே நிலை தொடர்ந்தால் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தொடர் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.