/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி
/
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி
பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி
ADDED : மார் 25, 2024 06:17 AM

ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமரன், 45; ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நினைவிட சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து வந்த லாரி ஒன்று, அந்த சந்திப்பில் 'யு -டர்ன்' எடுத்தது. இதனால், காவலர் முத்துகுமரன் எதிர் திசையில் வந்த வாகனங்களை நிறுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சென்னை மார்க்கமாக இருந்து வேகமாக வந்த லோடு வேன், முத்துகுமார் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட முத்துகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் இருந்த காவலர் முத்துகுமரன் உடலுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.