/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டி.ஆர்.எஸ்.குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை
/
டி.ஆர்.எஸ்.குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 16, 2024 12:37 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் நத்தம் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் டி.ஆர்.எஸ்.குளோபல் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.
பத்தாம் வகுப்பில் மாணவி ஹினாசாரியா, ஹர்ஷினி, ஜெயஸ்ரீ மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தர்ஷினி, கேசவராஜூ, கோபிகா ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
பள்ளியில் தேர்ச்சி 100 சதவீதம் பெற துணை புரிந்த பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் சேர்மன் சுப்ரமணியம், செயலர் ரவிக்குமார் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் கவிதா, நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.