/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி மாணவனை தாக்கிய இருவர் கைது
/
கல்லுாரி மாணவனை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 12:54 AM
திருத்தணி:திருத்தணி அம்பேத்கர் நகர் பகுதி சேர்ந்தவர் கோபி, 21. இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லுாரி விடுமுறை என்பதால் கோபி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி கோபி வீட்டில் இருந்த போது, திருத்தணி நேரு நகர் சேர்ந்த அசாம்முகமத், 24, சித்துார் சாலை சேர்ந்த இளங்கோவன், 24, சதீஷ்குமார், வெங்கடேச பெருமாள் ஆகிய நான்கு பேரும், வீட்டிற்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டினர்.
அப்போது கோபி தன்னிடம் இல்லை என கூறியதால், ஆத்திரமடைந்த நால்வரும் கையில் வைத்திருந்த பீர்பாட்டில்களால் கோபியை தாக்கினர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் திருத்தணி அருகே பதுங்கியிருந்த அசாம்முகமத், இளங்கோவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.