ADDED : ஜூன் 09, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி, ஜூன் 10–
கும்மிடிப்பூண்டி அருகே, பைக்கில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி, பைக்கில் வந்த இரு வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பயணித்த, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த விக்ரம், 20, கொளத்துார் பகுதியை சேர்ந்த பொன்மாரியப்பன், 18, ஆகியோரிடம், 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
