ADDED : ஜூலை 22, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், வடமாநில உணவகங்களான தாபாக்கள் இயங்கி வருகின்றனர்.
அங்கு, சட்ட விரோதமாக குடி மையங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இரு தாபாக்களில் அனுமதியின்றி குடி மையம் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இரு தாபாக்களின் உரிமையாளர்களான ஏழுமலை, 40, நசீர், 52, ஆகியோரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.