ADDED : ஜூலை 02, 2024 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், பெரியபாளையம் - புதுவாயல் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், இரண்டு பேர் சுற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், 23, தினேஷ், 23 என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பைக், மொபைல்போன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் இருவரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.