ADDED : ஆக 08, 2024 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு:அம்பத்துாரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 21; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 5ம் தேதி இரவு வேலை முடித்து, திருவேற்காடு பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார்.
கீழ் அயனம்பாக்கம், பெருமாள் கோவில் தெரு அருகே சென்றபோது, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த திருவேற்காடு போலீசார், திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், 20, மதுரவாயலைச் சேர்ந்த முகேஷ், 20, ஆகியோரை கைது செய்தனர்.