/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயி வீட்டில் திருடிய இருவர் சிக்கினர் 85 சவரன், இருசக்கர வாகனம் பறிமுதல்
/
விவசாயி வீட்டில் திருடிய இருவர் சிக்கினர் 85 சவரன், இருசக்கர வாகனம் பறிமுதல்
விவசாயி வீட்டில் திருடிய இருவர் சிக்கினர் 85 சவரன், இருசக்கர வாகனம் பறிமுதல்
விவசாயி வீட்டில் திருடிய இருவர் சிக்கினர் 85 சவரன், இருசக்கர வாகனம் பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2024 12:19 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பெரம்பூர் கிராமம், பாஞ்சாலி நகரில் வசித்து வருபவர் மணிகண்டன், 30 விவசாயி மற்றும் வேன் ஓட்டுனர். கடந்த, 22ம் தேதி சென்னை மணலியில் உள்ள மாமியார் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளை அழைத்து வர சென்றார்.
மறுநாள் மனைவி குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைத்து அதில் இருந்த 5 சவரன் நகை, 900 கிராம் வெள்ளிப் பொருட்கள் 2 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டின் வெளியே விட்டுச் சென்ற ஸ்கூட்டி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். எஸ்.பி.,சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை அருகில் திரிந்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், தோமூர் பிரபாகரன், 38, பூண்டி கேசவன், 28, என்பது தெரியவந்தது. பெரம்பூர் கிராமத்தில் மணிகண்டன் வீட்டில் பணம், நகை, பைக் திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் பல இடங்களில் திருடியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 85 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் மீது வெங்கல், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன போலீசார், அவர்களை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.