ADDED : ஆக 19, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், கச்சூர் கிராமத்தில் தனியார் பள்ளி அருகே இரண்டு நபர்கள் கட்டையுடன் நின்று அவ்வழியே செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை தகாத வார்த்தைகள் பேசியும், தாக்கியும் வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பென்னலுார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவர் ரவுடியிசம் செய்து வந்தது தெரியவந்தது.
போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் கூனிப்பாளையம் லோகேஷ், 26, பென்னலுார்பேட்டை மேட்டுக்காலனி வினோத்குமார், 32 என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

