ADDED : செப் 04, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வருவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பொதட்டூர்பேட்டை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் இரண்டு பேர் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்தனர். அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், எம்.சாண்டுக்கு கீழே மணல் பதுக்கியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த மணி, 32, மற்றும் ரஜினி, 39, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.