/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ வீலர் -- கார் மோதல் தாய், மகன் படுகாயம்
/
டூ வீலர் -- கார் மோதல் தாய், மகன் படுகாயம்
ADDED : ஜூன் 27, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ஜெயராமன், 33. இவருக்கு, வரும் 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதற்கான திருமண அழைப்பிதழை, உறவினர்களுக்கு வழங்குவதற்காக, நேற்று முன்தினம் காலை அவரது தாயுடன் பள்ளிப்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ராஜாநகரம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.