ADDED : மே 21, 2024 06:29 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி கந்தன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார், 23. இவர் நேற்று முன்தினம் தனது இரு சக்கர வாகனத்தில், பழைய சென்னை சாலையில் பேட்மிட்டன் விளையாட்டு மைதானத்திற்கு வந்தார்.
பின், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டிக் கொண்டு விளையாட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காணவில்லை.
இது குறித்து மோகன்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, இரு சக்கர வாகனத்தை திருடிய ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், நகரி அடுத்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், 26 என்பவரை கைது செய்தனர்.
