தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரு தொழிலாளிகள் பலி

இரு தொழிலாளிகள் பலி

இரு தொழிலாளிகள் பலி


ADDED : ஏப் 02, 2024 08:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்:காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய், 22. இவர் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு வந்துள்ளர். அப்போது காவலாளி அறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

தொழிற்சாலை ஊழியர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

l வேலுார் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45. இவர் கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் தங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மாதம் ஒருமுறை வீட்டிற்கு சென்று வருவார்.

நேற்று முன்தினம் காலை பணியிலிருந்த பன்னீர்செல்வம் மயங்கி கிடந்துள்ளார்.

உடன் பணிபுரிபவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us