/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத கொம்பந்தாங்கல் ஏரி புதுப்பட்டு விவசாயிகள் அவதி புதுப்பட்டு விவசாயிகள் அவதி

ADDED : ஜூலை 02, 2024 06:57 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கொம்பந்தாங்ல் பகுதியில் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் கொம்பந்தாங்கல் ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி 80 ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த ஏரி போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. நீர் வெளியேறும் மதகு பகுதி மிகவும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளது.
இதனால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொம்பந்தால் ஏரியை சீரமைக்க வேண்டுமென புதுப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.