/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத மழைநீர் கால்வாய் ஏரிக்கு மழைநீர் செல்வதில் இடையூறு
/
பராமரிப்பு இல்லாத மழைநீர் கால்வாய் ஏரிக்கு மழைநீர் செல்வதில் இடையூறு
பராமரிப்பு இல்லாத மழைநீர் கால்வாய் ஏரிக்கு மழைநீர் செல்வதில் இடையூறு
பராமரிப்பு இல்லாத மழைநீர் கால்வாய் ஏரிக்கு மழைநீர் செல்வதில் இடையூறு
ADDED : ஜூன் 29, 2024 02:18 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி அமைந்துள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, 300 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த ஏரிக்கு கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து குருவி அகரம், ரெட்டம்பேடு, குமரஞ்சேரி வழியாக பயணிக்கும் கால்வாய் வாயிலாக மழைநீர் வரத்து உள்ளது.
இந்த கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி துார்ந்து கிடப்பதால், பனப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாய் முழுதும் புதர்கள் சூழ்ந்து உள்ளன. விவசாய நிலங்கள் செல்வதற்காக ஆங்காங்கே கால்வாயை மூடி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கால்வாயை துார்வாரி பராமரிக்க வேண்டும் என, பனப்பாக்கம் கிராம விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி கூறியதாவது:
கால்வாய் பராமரிப்பு இன்றி கிடப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பெரியகரும்பூர் அருகே உள்ள மற்றொரு கால்வாய் வழியாக வெளியேறி, பழவேற்காடு ஏரியில் கலந்து வீணாகிறது.
எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், மழைநீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்கிறோம். மழைக்காலங்களில் ஏரிக்கு மழைநீர் வருவதில் பல்வேறு சிக்கல் தொடர்வதால், உரிய பாசன வசதி கிடைக்காமல் தவிக்கிறோம்.
இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள், கால்வாயை துார்வாரி சீரமைத்து தரவேண்டும். மேலும், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு வீணாக செல்லும் மழைநீரை தடுத்து, பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு வருவதற்கு ஏற்ப தடுப்பணை அமைக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.