/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு மீன் இறங்கு தளத்தில் அகற்றப்படாத கழிவால் துர்நாற்றம்
/
பழவேற்காடு மீன் இறங்கு தளத்தில் அகற்றப்படாத கழிவால் துர்நாற்றம்
பழவேற்காடு மீன் இறங்கு தளத்தில் அகற்றப்படாத கழிவால் துர்நாற்றம்
பழவேற்காடு மீன் இறங்கு தளத்தில் அகற்றப்படாத கழிவால் துர்நாற்றம்
ADDED : பிப் 27, 2025 01:06 AM

பழவேற்காடு:பழவேற்காடில் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடிக்கும் மீனவர்கள், அவற்றை விற்பனை செய்வதற்கு, மீன் இறங்கு தளத்திற்கு கொண்டு வருகின்றனர்.
பின், அவற்றை படகுகளில் இருந்து, மீன் ஏலக்கூடத்திற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்த மீன் இறங்குதள வளாகம் முழுதும், குப்பை, கழிவு சூழ்ந்து கிடக்கின்றன.
மீனவர்களின் வலையில் சிக்கும் விற்பனைக்கு அனுப்ப இயலாத மீன் வகைகள் இறந்த தள பகுதியில் துாக்கி வீசப்படுகின்றன. மீன் விற்பனை அங்காடியிலும் இருந்து வெளியேற்றப்படும், மீன்கழிவு இறங்குதள வளாகத்தில் கொட்டி குவிக்கப்படுகின்றன.
இவை உடனுக்கு அப்பறப்படுத்தாத நிலையில், நாளடைவில் கழிவில் இருந்து புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இது, மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணியர், மீன் வியாபாரிகள், மீனவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
மீன் இறங்குதளம் வளாகத்தை பராமரிக்க, அங்குள்ள கடைகள், வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காட்டப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன் இறங்கு தள வளாகத்தில் கழிவை, ஒரே இடத்தில் கொட்டி, அவற்றை சுகாதாரமாக அகற்றுவதற்கு மீன்வளத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

