/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயனில்லாத பயணியர் நிழற்குடை ரூ.5 லட்சம் வரிப்பணம் வீண்
/
பயனில்லாத பயணியர் நிழற்குடை ரூ.5 லட்சம் வரிப்பணம் வீண்
பயனில்லாத பயணியர் நிழற்குடை ரூ.5 லட்சம் வரிப்பணம் வீண்
பயனில்லாத பயணியர் நிழற்குடை ரூ.5 லட்சம் வரிப்பணம் வீண்
ADDED : மார் 02, 2025 11:50 PM

திருவள்ளூர்,
திருவள்ளூர் - மணவாள நகர் செல்லும் வழியில், பெரியகுப்பம் - ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அங்குள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று செல்வதால், போக்குவரத்து நெரிசல் நிலவியது. மேலும், பயணியர் வெயில், மழையால் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, 2016ம் ஆண்டு திருவள்ளூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில், பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் சாலையிலேயே நின்று செல்கின்றன.
இதனால், பயணியருக்காக கட்டப்பட்ட நிழற்குடை பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. மேலும், கட்டுமான பொருட்கள் குவிக்கும் இடமாகவும் நிழற்குடை மாறிவிட்டது.
இதன் காரணமாக, மீண்டும் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் மீண்டும் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.