/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டும், குழியுமான நிலையில் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை
/
குண்டும், குழியுமான நிலையில் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை
குண்டும், குழியுமான நிலையில் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை
குண்டும், குழியுமான நிலையில் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலை
ADDED : ஜூலை 19, 2024 03:46 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவிக்குப்பம் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக வெண்மனம்புதுார், காரணி, விடையூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
சேதமடைந்து மண் சாலையாக இருந்த இந்த ஒன்றிய சாலை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
ஆனால் பேருந்து நிறுத்தத்திலிருந்து 200 மீ., துாரமுள்ள சாலை மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் இந்த சாலை கற்கள் பெயர்ந்து சிறு மழை பெய்தால் மோசமான நிலையில் உள்ளது.
மேலும் விடையூர் ஏரியிலிருந்து அரசு உத்தரவுப்படி சவுடு மணல் எடுத்து செல்லும் போது இந்த சாலை வழியே மணல் லாரிகள் சென்று வந்ததால் ஏரிக்கரை சாலை ஆங்காங்கே சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.
இதனால் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டுமென கடம்பத்துார், காரணி, விடையூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.