/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 31, 2024 11:13 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில், வரசித்தி விநாயகர் கோவில் அமைந்து உள்ளது.
கோவிலில் கடந்த ஒரு ஆண்டாக கோவிலின் உயரத்தை அதிகப்படுத்துவது, புதிய சன்னிதிகளை ஏற்படுத்துவது, பளிங்கு கற்கள் பதிப்பது உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதற்காக கடந்த, 28 ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை, முதல்யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம், புதிய பிம்பம் கண்திறத்தல், புதிய பிம்ப பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, நான்காம் யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வாண வேடிக்கைகளுடன், கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு மஹாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று விநாயகரை வணங்கிச் சென்றனர்.