/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை
/
ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை
ADDED : பிப் 27, 2025 01:16 AM

திருவள்ளூர்:திருவளளூர் மாவட்டத்தில், 247 ஊர்க்காவலர் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர் பல்பொருள் அங்காடியில், பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
தகவலறிந்த திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் நேற்று, முதல்கட்டமாக 181 ஊர்க்காவல் படையினருக்கு, மாவட்ட காவல் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
அடையாள அட்டை பெற்ற இவர்கள், திருவள்ளூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர் பல்பொருள் அங்காடிகளிலும், பொருட்கள் வாங்கி பயன் பெறலாம் என, எஸ்.பி., தெரிவித்தார்.
மீதமுள்ளவர்களுக்கும் பல்பொருள் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் எஸ்.பி., தெரிவித்தார்.

