/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு:ஊராட்சி தலைவர்கள் பங்கேற்பு
/
வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு:ஊராட்சி தலைவர்கள் பங்கேற்பு
வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு:ஊராட்சி தலைவர்கள் பங்கேற்பு
வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு:ஊராட்சி தலைவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 20, 2024 08:14 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் தற்போது உள்ள தலைவர்களின் பதவி காலம் 2025 ஜனவரியில் முடிகிறது. இருப்பினும் பதவி காலம் முடிந்துவிட்டது என கருதாமல், ஊராட்சி தலைவர்கள் அதிகாரத்துடன் தங்களது பொறுப்பு மற்றும் கடமை என்னவென்று தெரிந்து கொண்டு சிறந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.
பெண் ஊராட்சித் தலைவர்கள் கணவர்கள் துணையின்றி தாங்களாகவே பணியாற்ற வேண்டும்.
ஊராட்சி தலைவர்கள் கிராமப்புறங்களில் உள்ள சாதிய பாகுபாடு, பாலினம் வேறுபாடுகளை, ஒழித்து சமூக நீதியினை நிலை நாட்ட வேண்டும்.
வன்கொடுமை ஜாதி வேறுபாடு கிராமப்புறங்களில் அதிக அளவு காணப்படுகிறது. அதை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியினை வளர்க்க வேண்டும்.
ஊராட்சிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திடக்கழிவுமேலாண்மை கையாள்வதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஜெயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.